லாரி கவிழ்ந்து பெண் பலி
லாரி கவிழ்ந்து பெண் பலியானார்
சிவகங்கை
காளையார்கோவில்,
காளையார் கோவில் அருகே ஊத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவரது மனைவி கலா (35).இவர் செங்கல் இறக்கும் லோடுமேன் ஆக பணிபுரிந்து வந்தார். காளையார் கோவிலில் இருந்து சூராணத்திற்கு லாரியில் செங்கல் இறக்குவதற்காக சக ஊழியர்களுடன் லாரியில் சென்றார். லாரி அஞ்சவயல் கிராமத்தின் அருகில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் லாரியில் அமர்ந்திருந்த கலா சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் இருந்த மற்ற ஊழியர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். லாரி கவிழ்ந்தவுடன் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி வழக்கு பதிவு செய்து தப்பிய ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story