மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி சாவு
பென்னாகரம் அருகே வீடு கட்டுமான பணிக்கு இடையூறாக இருந்த மரத்தை வெட்டிய போது மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி பரிதாபமாக பரிதாபமாக உயிரிழந்தார்.
பென்னாகரம்:
பென்னாகரம் அருகே வீடு கட்டுமான பணிக்கு இடையூறாக இருந்த மரத்தை வெட்டிய போது மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி பரிதாபமாக பரிதாபமாக உயிரிழந்தார்.
கட்டிட மேஸ்திரி
பென்னாகரம் அருகே உள்ள பிள்ளப்பட்டியை சேர்ந்தவர் செல்வன் (வயது 45). கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று முன்தினம் தனது நிலத்தில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது கட்டுமான பணிக்கு இடையூறாக இருந்த மரத்தை அவர் வெட்டி உள்ளார். அந்த மரம் மேலே சென்ற மின் கம்பி மீது விழுந்தது.
இதனால் மரம் சாய்ந்ததில் செல்வத்தை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் செல்வத்தை மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது செல்வம் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து பென்னாகரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீடு கட்டுமான பணிக்கு இடையூறாக இருந்த மரத்தை வெட்டிய போது மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.