லாரி கவிழ்ந்து படுகாயம் அடைந்த முதியவர் சாவு


லாரி கவிழ்ந்து படுகாயம் அடைந்த முதியவர் சாவு
x

பாப்பிரெட்டிப்பட்டி அருகே லாரி கவிழ்ந்து படுகாயம் அடைந்த முதியவர் இறந்தார்.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள விழுதுப்பட்டியில் இருந்து தேங்காய் பாரம் ஏற்றி வந்த லாரி பாஞ்சாலி நகர் பஸ் நிறுத்த பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தென்கரைக்கோட்டையை சேர்ந்த தொழலாளி ஜிகிரிபாய் (வயது 60), லாரி டிரைவர் மாலிக்பாஷா உள்ளிட்ட 7 பேர் பேர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜிகிரிபாய் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து புகாரின் பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story