அரசு பஸ் மோதி எலக்ட்ரீசியன் பலி


அரசு பஸ் மோதி எலக்ட்ரீசியன் பலி
x

அரசு பஸ் மோதி எலக்ட்ரீசியன் பலியானார்.

மதுரை

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா (வயது45). இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறார். இவர் மோட்டார் சைக்கிளில் கொட்டாம்பட்டிக்கு சென்றபோது மதுரையில் இருந்து திருச்சி சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story