மின்னல் தாக்கி தொழிலாளி சாவு
தேன்கனிக்கோட்டை அருகே மின்னல் தாக்கி தொழிலாளி இறந்தார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார். குழந்தைகள் காயமின்றி உயிர் தப்பினர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே மின்னல் தாக்கி தொழிலாளி இறந்தார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார். குழந்தைகள் காயமின்றி உயிர் தப்பினர்.
மின்னல் தாக்கியது
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ராமச்சந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பா (வயது 46). கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா (32). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று அதிகாலை சிவப்பா, தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஓட்டு வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார்.
அப்போது அந்த பகுதியில் இடி, மின்னலுடன் திடீரென பலத்த மழை பெய்தது. வீட்டில் தூங்கி கொண்டு இருந்த சிவப்பா, அவரது மனைவி மஞ்சுளா ஆகியோர் மீது மின்னல் தாக்கியது. இதில் சிவப்பா சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி மஞ்சுளா படுகாயம் அடைந்தார். குழந்தைகள் 3 பேரும் காயமின்றி உயிர் தப்பினர்.
போலீசார் விசாரணை
இதையறிந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து படுகாயம் அடைந்த மஞ்சுளாவை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை போலீசார் விரைந்து சென்று சிவப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கி தொழிலாளி இறந்த தகவல் அறிந்ததும் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. விரைந்து வந்தார். அவர் உயிரிழந்த சிவப்பா உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.