மொபட் மீது ஸ்கூட்டர் மோதி விவசாயி சாவு


மொபட் மீது ஸ்கூட்டர் மோதி விவசாயி சாவு
x
தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 15 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அருகே மொபட் மீது ஸ்கூட்டர் மோதி விவசாயி இறந்தார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை அருகே உள்ள துடுகனஅள்ளி பக்கமுள்ள கோவில் கொட்டாயை சேர்ந்தவர் நடேசன் (வயது 60). விவசாயி. இவர் மொபட்டில் கடந்த 13-ந் தேதி நாகராஜபுரம் பக்கமாக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த நபர், நடேசன் மீது மோதினார். இதில் படுகாயமடைந்த நடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story