பாம்பாற்றில் சுழலில் சிக்கி சட்டக்கல்லூரி மாணவர் சாவு
ஊத்தங்கரை அருகே பாம்பாற்றில் குளித்த போது சுழலில் சிக்கி சட்டக்கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
ஊத்தங்கரை
ஊத்தங்கரை அருகே பாம்பாற்றில் குளித்த போது சுழலில் சிக்கி சட்டக்கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சட்டக்கல்லூரி மாணவர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அருகே உள்ள கொண்டம்பட்டியை சேர்ந்தவர் குப்புசாமி. விவசாயி. இவருடைய மகன் தீர்த்தகிரி (வயது 24).. தர்மபுரி சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் கொண்டம்பட்டி அருகே பாம்பாற்றில் குளித்து கொண்டு இருந்தார்.
அப்போது அவர் திடீரென தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மாணவரை தேடினர். பல்வேறு இடங்களில் தேடியும் அவர் எங்கும் கிடைக்கவில்லை. அப்போது அவர் சுழலில் சிக்கி இறந்தது தெரியவந்தது.
உடல் மீட்பு
இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக தீயணைப்பு படையினர் தீர்த்தகிரியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பாவக்கல் அருகே தீர்த்தகிரியின் உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர். அங்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.