மின்னல் தாக்கி வடமாநில தொழிலாளி பலி


மின்னல் தாக்கி வடமாநில தொழிலாளி பலி
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே மின்னல் தாக்கி வடமாநில தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் அருகே மின்னல் தாக்கி வடமாநில தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

மின்னல் தாக்கியது

பீகார் மாநிலம் சாம்ரான் தாலுகாவை சேர்ந்தவர் பிட்டுகுமார் (வயது 20). இவர் ஓசூர் தாலுகா பாகலூர் அருகே எலுவப்பள்ளியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். கடந்த 19-ந் தேதி இவர் சொக்கநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் இருந்தார். அப்போது அந்த பகுதியில் மழை பெய்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென்று பிட்டுகுமார் மின்னல் தாக்கியது. இதில் அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆனேக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பரிதாப சாவு

ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாகலூருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று பிட்டுகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story