மின்சாரம் தாக்கி தனியார் நிறுவன ஊழியர் சாவு


மின்சாரம் தாக்கி தனியார் நிறுவன ஊழியர் சாவு
x
தினத்தந்தி 26 Oct 2022 12:15 AM IST (Updated: 26 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே மின்சாரம் தாக்கி தனியார் நிறுவன ஊழியர் இறந்தார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

கிருஷ்ணகிரி அருகே எருமப்பட்டி கிராமத்தை சேர்ந்தவா் குண்டுமணி. இவரது மகன் கார்த்திக் (வயது29). இவர், ஓசூர் சிப்காட் அருகே கோவிந்த அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பிளாஸ்டிக் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

சம்பவத்தன்று அவர் நிறுவனத்தில் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதனால் சக தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அவர்கள், கார்த்திக்கை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று இறந்த கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story