மின்சாரம் தாக்கி விவசாயி சாவு
பென்னாகரம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
பென்னாகரம்:
பென்னாகரம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
விவசாயி
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கோணங்கிஅள்ளியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் முனுசாமி (வயது 35). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது நிலத்தில் விவசாய பணியை மேற்கொண்டு இருந்தார். அப்போது மின் மோட்டார் பழுதடைந்தது. இதையடுத்து அவர் மின் மோட்டார் வயர்களை சரி செய்ய முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட முனுசாமி படுகாயம் அடைந்தார். உயிருக்கு போராடிய அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அவர்கள் முனுசாமியை மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது முனுசாமி ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதுதொடர்பாக பென்னாகரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த முனுசாமிக்கு செல்வி என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகனும் உள்ளனர். மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.