கிணற்றில் தவறி விழுந்து சிறுமி சாவு
மத்திகிரி அருகே கிணற்றில் தவறி விழுந்து வடமாநில சிறுமி பரிதாபமாக இறந்தார்.
மத்திகிரி
மத்திகிரி அருகே கிணற்றில் தவறி விழுந்து வடமாநில சிறுமி பரிதாபமாக இறந்தார்.
வடமாநில சிறுமி
உத்தரபிரதேச மாநிலம் சாக்கியா தாலுகா மதுவஉதாரி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சய். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மத்திகிரி அடுத்த இடையநல்லூரில் குடும்பத்துடன் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் மன்சிகா (வயது12). சிறுமி சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றார்.
அப்போது கிணற்றில் சிறுமி தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மத்திகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
அங்கு பிரேத பரிசோதனைக்கு பின்னர் சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வடமாநில சிறுமி கிணற்றில் தவறி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.