வடமாநில தொழிலாளி பலி
ஓசூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தபோது இரும்பு தகடுகள் தலையில் விழுந்து வடமாநில தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
ஓசூர்
ஓசூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தபோது இரும்பு தகடுகள் தலையில் விழுந்து வடமாநில தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தொழிலாளி
அசாம் மாநிலம் தாரங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜாகுவர்அலி. இவரது மகன் ஓமிசூல் ஹோக் (வயது 18). இவர் ஓசூரில் பேகேப்பள்ளி எழில் நகர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று அவர், ஜூஜூவாடி- பேகேப்பள்ளி சாலையில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக மேலே இருந்து இரும்பு தகடுகள் ஓமிசூல் ஹோக் தலை மீது விழுந்தன. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்த சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
விசாரணை
இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று ஓமிசூல் ஹோக்கின் உடலை கைப்பற்றி ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.