மோட்டார்சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதல்; வாலிபர் பலி
திருப்பூர்
ரவக்குறிச்சி பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த வேலுச்சாமி என்பவரின் மகன் ஜெயக்குமார் (வயது 30). திருமணம் ஆகவில்லை. இவர் திருப்பூரில் தங்கி தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று ஜெயக்குமார் மோட்டார் சைக்கிளில் மங்கலத்தை அடுத்த கோம்பக்காடுபுதூர் பகுதியில் இருந்து காரணம்பேட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த டிப்பர்லாரி ஜெயக்குமார் ஓட்டிச்சென்ற ேமாட்டார்சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் ஜெயக்குமார் சம்பவ இடத்தில் பலியானார். இந்த விபத்து குறித்து மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Next Story