குளத்தில் மூழ்கி அய்யப்ப பக்தர் சாவு


குளத்தில் மூழ்கி அய்யப்ப பக்தர் சாவு
x

குளத்தில் மூழ்கி அய்யப்ப பக்தர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிவகங்கை

காரைக்குடி,

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (வயது 22). இவர் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவரும் சிதம்பரத்தை சேர்ந்த 37 பேரும் அய்யப்பன் கோவிலுக்கு பஸ்சில் சென்றனர். செல்லும் வழியில் குன்றக்குடி வந்தனர். அங்கு சாமி தரிசனம் செய்வதற்காக அருகில் உள்ள குளத்தில் குளித்தனர்.பின்னர் சாமி தரிசனம் செய்துவிட்டு பஸ்சில் அய்யப்பன் கோவிலுக்கு புறப்படுவதற்குமுன் அனைவரும் வந்து விட்டனரா என சரிபார்த்தபோது சந்தோஷ்குமார் வராமல் இருப்பது தெரியவந்தது. உடனடியாக குளக்கரை சென்று பார்த்தபோது அங்கு அவரது ஆடைகள் கரையில் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவருடன் வந்த அய்யப்ப பக்தர்கள் குன்றக்குடி போலீசில் புகார் செய்தனர். போலீசார் கொடுத்த தகவலின் பேரில் காரைக்குடி தீயணைப்புத்துறையினர் குளத்தில் தேடிப்பார்த்து குளத்தில் மூழ்கி இறந்து போன சந்தோஷ் குமாரின் உடலை மீட்டனர். இது குறித்து குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story