மோட்டார் சைக்கிள் மோதி பெண் சாவு


மோட்டார் சைக்கிள் மோதி பெண் சாவு
x
தினத்தந்தி 21 Dec 2022 12:15 AM IST (Updated: 21 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கந்திகுப்பம் அருகே கணவருடன் மொபட் டில் செனறபோது மோட்டார் சைக்கிள் மோதி பெண் இறந்தார்.

கிருஷ்ணகிரி

பர்கூர்

கந்திகுப்பம் அருகே உள்ள சத்தலப்பள்ளியை சேர்ந்தவர் சக்தி. துணி வியாபாரி. இவரது மனைவி விஜயசாந்தி (வயது 30). கணவன்-மனைவி 2 பேரும் நேற்று முன்தினம் இரவு மொபட்டில் கிருஷ்ணகிரிக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டு இருந்தனர். சுண்டம்பட்டி அருகே சென்ற போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது.

இதில் கணவன்-மனைவி 2 பேரும் கீழே விழுந்தனர். இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த விபத்தில் விஜயசாந்தி படுகாயம் அடைந்தார். சக்தி லேசான காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சக்தி, மனைவியை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விஜயசாந்தி நேற்று பரிதாபமாகஉயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கந்திகுப்பம் போலீசார் விரைந்து சென்று விஜயசாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story