மின்சாரம் தாக்கி முடி திருத்தும் தொழிலாளி சாவு
பர்கூர் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை தொட்டபோது மின்சாரம் தாக்கி முடி திருத்தும் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
பர்கூர்
பர்கூர் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை தொட்டபோது மின்சாரம் தாக்கி முடி திருத்தும் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
முடி திருத்தும் தொழிலாளி
பர்கூர் அருகே உள்ள ஜி.நாகமங்கலத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 27). இவர் அச்சமங்கலம் கூட் ரோட்டில் முடிதிருத்தும் கடை வைத்து இருந்தார். சம்பவத்தன்று இரவு இவரது வீட்டின் அருகில் மின் கம்பி அறுத்து கிடந்்துள்ளது. இதை அவர் எடுத்து அப்புறப்படுத்த முயன்றார்.
அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் அவர்கள் அருண்குமாரை மீட்டு கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பரிதாப சாவு
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் தாக்கி முடிதிருத்தும் தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.