அரசு பஸ்சில் தவறி விழுந்து முதியவர் சாவு


அரசு பஸ்சில் தவறி விழுந்து முதியவர் சாவு
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 11:54 AM IST)
t-max-icont-min-icon

மத்தூரில் டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் அரசு பஸ்சில் தவறி விழுந்து முதியவர் இறந்தார்.

கிருஷ்ணகிரி

மத்தூர்

ஓசூர் அருகே உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது65). இவர் மத்தூர் அருகே நடந்த கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தனது குடும்பத்தினருடன் வந்தார். மத்தூரில் இருந்து அரசு டவுன் பஸ்சில் திருவிழா நடக்கும் கிராமத்திற்கு சென்றார். முதியவர் பின் இருக்கையில் அமர்ந்து சென்றதாக கூறப்படுகிறது. மத்தூர் சிவன் கோவில் அருகே பஸ் சென்றபோது எதிரே சைக்கிளில் ஒருவர் வந்தார். இதனால் டிரைவர் சைக்கிள் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டுள்ளார். அப்போது பஸ்சின் கடைசி இருக்கையில் அமர்ந்து இருந்த முதியவர் பஸ்சுக்குள் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

இதையடுத்து குடும்பத்தினர் அவரை மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது முதியவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story