சாரத்தில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் சாவு
வீடுகட்டும் பணியில் ஈடுபட்ட கொத்தனார் சாரத்தில் இருந்து தவறி விழுந்து பலியானார்.
சிவகங்கை
திருப்புவனம்
திருப்புவனம் அருகே உள்ள வயல்சேரி கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 32) கொத்தனார். சம்பவத்தன்று அவர் திருப்புவனத்தில் உள்ள சிவசிவா நகர் பகுதியில் ஒரு வீட்டில் கட்டிட பணிக்காக சென்றார். அங்கு அவர் சாரம் அமைத்து வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சாரத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பாலமுருகன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி சாந்திபிரியா திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம்போஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story