மோட்டார்சைக்கிளில் சென்றவர் சாவு
கார் மோதி மோட்டார்சைக்கிளில் சென்றவர் இறந்தார்.
சிவகங்கை
திருப்புவனம்
பூவந்தி அருகே உள்ள மேலப்பூவந்தியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 26). இவர் சலூன் கடை நடத்தி வந்தார். அதேபோல் மதுரை மாவட்டம் கீழப்பனங்காடியை சேர்ந்தவர் பிரபுகார்த்திக் (21). இவர் அரசனூர் அருகே உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் 4-ம் ஆண்டு வழக்கறிஞர் பிரிவு படித்து வருகிறார். நேற்று விஜயகுமார் சிவகங்கை சென்று விட்டு மேலப்பூவந்திக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார்.
பிரபு கார்த்திக் தனது காரில் பல்கலைக்கழகத்திற்க்கு வந்துள்ளார். கீரனூர் விலக்கு அருகே சென்றபோது காரும், மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story