படுகாயம் அடைந்த தாயும் சாவு


படுகாயம் அடைந்த தாயும் சாவு
x
தினத்தந்தி 14 Feb 2023 12:15 AM IST (Updated: 14 Feb 2023 11:59 AM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கரை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி குழந்தை பலியான விபத்தில் படுகாயம் அடைந்த தாயும் பரிதாபமாக இறந்தார். கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை

ஊத்தங்கரை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி குழந்தை பலியான விபத்தில் படுகாயம் அடைந்த தாயும் பரிதாபமாக இறந்தார். கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

லாரி மோதியது

ஊத்தங்கரை அருகே உள்ள சாமல்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முரளி. (வயது 34). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி வேள்வி (வயது 22). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு சித்தார்த் என்கிற 9 மாத ஆண் குழந்தை இருந்தது.

இதனிடையே குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் நேற்று முன்தினம் முரளி, வேள்வி ஆகியோர் குழந்தையை மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு அழைத்த சென்றனர்.ஊத்தங்கரை அருகே ஜண்டாமேடு அருகில் சென்றபோது அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. கணவன்-மனைவி 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தாயும் சாவு

இந்தநிலையில் 2 கால்களும் துண்டான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வேள்வி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். முரளிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை போலீசார் விரைந்து சென்று இறந்த வேள்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஏற்கனவே 9 மாத ஆண் குழந்தை இறந்த நிலையில் தற்போது தாயும் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story