சரக்கு வேன் கவிழ்ந்து முன்னாள் வார்டு உறுப்பினர் சாவு


சரக்கு வேன் கவிழ்ந்து முன்னாள் வார்டு உறுப்பினர் சாவு
x
தினத்தந்தி 18 Feb 2023 12:15 AM IST (Updated: 18 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஏக்கல்நத்தம் மலைப்பாதையில் சரக்கு வேன் கவிழ்ந்து முன்னாள் வார்டு உறுப்பினர் இறந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.

கிருஷ்ணகிரி

குருபரப்பள்ளி

ஏக்கல்நத்தம் மலைப்பாதையில் சரக்கு வேன் கவிழ்ந்து முன்னாள் வார்டு உறுப்பினர் இறந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.

வேன் கவிழ்ந்தது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஏக்கல்நத்தம் மலைகிராமத்திற்கு கடந்த 2020-ம் ஆண்டு தார்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையில் பஸ் போக்குவரத்து இல்லாததால் கிராம மக்கள் மோட்டார்சைக்கிள்களிலும், சரக்கு வேன்களிலும் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வேப்பனப்பள்ளிக்கு வந்து வாங்கி செல்வது வழக்கம்.

அதன்படி மகா சிவராத்திரி பண்டிகையையொட்டி நேற்று ஏக்கல்நத்தம் கிராமத்தை சேர்ந்த 15 பேர் வேப்பனப்பள்ளிக்கு சென்று பூஜை பொருட்கள் வாங்கி கொண்டு மலைபாதை வழியாக சரக்கு வேனில் ஊருக்கு சென்றனர். மலைபாதையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

முன்னாள் வார்டு உறுப்பினர் சாவு

இந்த தில், ஏக்கல்நத்தத்தை சேர்ந்த முன்னாள் வார்டு உறுப்பினர் ராமச்சந்திரன் (வயது 62) என்பவர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் எர்ரசின்னப்பன், பெரியசாமி, உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மகராஜகடை போலீசார் விரைந்து சென்றுநு ராமசசந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story