குளத்தில் மூழ்கி சுகாதார பணியாளர் சாவு
குளத்தில் மூழ்கி சுகாதார பணியாளர் இறந்தார்.
சிவகங்கை
காரைக்குடி,
செட்டிநாடு போலீஸ் சரகம் கோவில் அருகே உள்ள குளத்தில் ஆண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் குளத்தில் மிதந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குளத்தில் பிணமாக மிதந்தவர் பள்ளத்தூர் அருகே உள்ள பகுதியை சேர்ந்த சுகாதாரப் பணியாளர் முருகன் (வயது 52) என்பது தெரியவந்தது. இவர் குளத்தில் குளிக்க சென்ற போது குளத்தில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து செட்டிநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story