மின்சாரம் தாக்கி 2 மாடுகள் பலி
மின்சாரம் தாக்கி 2 மாடுகள் பலியாகின
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே சாத்தாகுடி கண்மாய் பகுதி அருகில் ஆயக்கட்டிற்கு உட்பட்ட வயலின் கரையில் அமைக்கப்பட்ட புதிய மின்கம்பங்கள் முறையாக பதிக்கப்படாமல் இருந்ததால் திடீரென்று வயலுக்குள் சாய்ந்து விழுந்தது. இதனால் மின் கம்பிகள் அறுந்து வயல்வெளிகளில் விழுந்தன. அந்த நேரத்தில் வயல்களில் கிடந்த தண்ணீர் மற்றும் அங்கு மேய்ச்சலில் இருந்து கொண்டிருந்த அக்கிராமத்தை சேர்ந்த மேஸ்திரி மூர்த்தி என்பவரது 2 பசு மாடுகள் மீது மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பசு மாடுகள் பலியாகின.
தகவல் அறிந்து ஊராட்சி மன்ற தலைவர் தேவதாஸ், அந்த இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் யாரும் வயலுக்குள் இறங்காத வகையில் பாதுகாப்பு பணியை ஏற்படுத்தி உடனடியாக மின்சார துறைக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.
அங்கு விரைந்து வந்த மின்சார துறையினர் மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.