மயங்கி கிடந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு
மயங்கி கிடந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ராமநாதபுரம்
ராமேசுவரம்,
ராமேசுவரம் கோவில் எதிரே அக்னி தீர்த்த கடற்கரை செல்லும் பகுதியில் உஜ்ஜைனி கோவில் அருகே மயங்கிய நிலையில் 55 வயதுடைய ஒருவர் கிடந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த கோவில் காவல் நிலைய போலீசார் அங்கு சென்று மயங்கி கிடந்தவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த நபர் இறந்து போனார். இதுகுறித்து கோவில் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீராம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story