நாகரசம்பட்டி அருகேதென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் வேலம்பட்டி அருகே உள்ள நாகரசம்பட்டி பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியரான கோவிந்தசாமி என்பவருக்கு சொந்தமான 4 ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. இந்த ேதாட்டத்தை நாகரசம்பட்டியை சேர்ந்த பன்னீர் செல்வம் மகன் பிரபு என்பவர் குத்தகை எடுத்தார்.
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் சுந்தரம்பள்ளி அடுத்த புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த மணி மகன் தொழிலாளியான அருண்குமார் மற்றும் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தேங்காய் பறிக்க வந்தனர். இதையடுத்து தேங்காய் பறிக்க அருண்குமார் மரத்தில் ஏறினார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும் இவரது இறப்பு குறித்து நகரசம்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர் தகவலின் பெயரில் அங்கு வந்த போலீசார் அருண்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அருணின் தந்தை மணி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேங்காய் பறிக்க மரத்தில் ஏறிய போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து தொழிலாளி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.