சாக்கடையில் தவறி விழுந்தவர் பலி


சாக்கடையில் தவறி விழுந்தவர் பலி
x
தினத்தந்தி 12 May 2023 12:15 AM IST (Updated: 12 May 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சாக்கடையில் தவறி விழுந்தவர் பலியானார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் 58 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தவறி விழுந்தார். அவரை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார். அவரது பெயர் சித்திரை வேலு என்பது மட்டும் தெரிந்துள்ளது. அவர் யார்? எந்த ஊர்? எதற்காக இங்கு வந்தார்? போன்ற விவரங்கள் தெரியவில்லை. இதுகுறித்து பட்டணம்காத்தான் கிராம நிர்வாக அதிகாரி வைதேகி அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story