மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்த ஊழியர் சாவு
சேலம் அம்மாபேட்டையில் மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்த மின்வாரிய ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
சேலம் அம்மாபேட்டையில் மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்த மின்வாரிய ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
மின்வாரிய ஊழியர்
தலைவாசலை அடுத்த தேவியாக்குறிச்சி இந்திரா காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவர், அம்மாப்பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 10-ந் தேதி அம்மாப்பேட்டையில் உள்ள மின்கம்பத்தில் ஏறி பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது, அவர் திடீரென கம்பத்தில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்துவிட்டார். இதில், மின் ஊழியர் செந்தில்குமாரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
போலீசார் விசாரணை
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அம்மாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நேற்று முன்தினம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தநிலையில் நள்ளிரவில் செந்தில்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.