காரிமங்கலம், பாலக்கோடு பகுதிகளில்கிணற்றில் தவறி விழுந்து மாணவன் உள்பட 2 பேர் சாவு


காரிமங்கலம், பாலக்கோடு பகுதிகளில்கிணற்றில் தவறி விழுந்து மாணவன் உள்பட 2 பேர் சாவு
x
தினத்தந்தி 11 Jun 2023 1:00 AM IST (Updated: 11 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம்

காரிமங்கலம், பாலக்கோடு பகுதிகளில் கிணற்றில் தவறி விழுந்து மாணவன் உள்பட 2 பேர் இறந்தனர்.

பள்ளி மாணவன்

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த ஈச்சங்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்லதுரை. விவசாயி. இவரது மகன் முகிலன் (வயது6). இவன் காரிமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று பெற்றோர் மகனை வீட்டில் விட்டு விட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று இருந்தனர். பின்னர் செல்லதுரை வீட்டுக்கு வந்தபோது மகனை காணவில்லை.

இதனால் பெற்றோர், மாணவனை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது மாணவன் முகிலன் கிணற்றில் பிணமாக மிதப்பது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலாளி

பாலக்கோடு அருகே உழவன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் மணி (33). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் அவரது மனைவி, அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் குளிக்க வைத்து மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்தார்.

அப்போது தனக்கு ஒரு மாதிரியாக உள்ளது. இதனால் மீண்டும் குளித்து விட்டு வருகிறேன் என மணி மனைவியிடம் கூறி சென்றவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story