உரிகம் அருகே யானை தாக்கி மூதாட்டி பலி


உரிகம் அருகே யானை தாக்கி மூதாட்டி பலி
x
தினத்தந்தி 19 Jun 2023 12:30 AM IST (Updated: 20 Jun 2023 10:01 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

உரிகம் அருகே யானை தாக்கி மூதாட்டி பலியானார்.

மூதாட்டி பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா உரிகம் வனச்சரக அலுவலர் வெங்கடாசலம் மற்றும் வன ஊழியர்கள் நேற்று காலை உரிகம் வனச்சரகத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரங்கசாமி கோவில்- உடுபரராணி கிராமத்திற்கு செல்லும் வழியில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார்.

இதையடுத்து இறந்த மூதாட்டியின் உடலை வனத்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அதில் அவரது பெயர் லட்சுமியம்மா (வயது 70) என்றும், அஞ்செட்டி தாலுகா கோட்டையூரை சேர்ந்தவர் என தெரியவந்தது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டு அந்த பகுதியில் சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது.

யானை தாக்கியது

கடந்த 3 நாட்களாக வீட்டிற்கு செல்லவில்லை. இந்த நிலையில் அவர் வனப்பகுதி அருகில் சென்றபோது யானை தாக்கியதில் இறந்திருக்கலாம் என தெரியவந்தது. இது குறித்து வனச்சரக அலுவலர் வெங்கடாசலம் அஞ்செட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story