கடலூர் அருகே தீக்காயமடைந்த இளம்பெண் சாவு


கடலூர் அருகே  தீக்காயமடைந்த இளம்பெண் சாவு
x

கடலூர் அருகே தீக்காயமடைந்த இளம்பெண் உயிரிழந்தார்.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

கடலூர் அருகே உள்ள அழகியநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் திவ்யகுமார். இவருடைய மனைவி அஸ்வினி (வயது 22). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 7 மாதத்தில் அனுஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று அஸ்வினி வீட்டில் சாமிக்கு விளக்கு ஏற்றி வழிபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அவருடைய ஆடையில் தீப்பிடித்து மளமளவென பற்றி எரிந்தது. இதில் உடல் கருகிய நிலையில் வலியால் அலறித்துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.பின்னர், மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று, சற்று உடல்நிலை தேறியவுடன் அஸ்வினி அவருடைய தாய் வீட்டில் தங்கி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அஸ்வினிக்கு நேற்று திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனே பெற்றோர் அவரை புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அஸ்வினி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குபஙபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உயிரிழந்த அஸ்வினிக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு மேல்விசாரணை நடத்த உள்ளார்.


Next Story