அம்பையில் பந்தயத்தில் பங்கேற்ற மாட்டு வண்டி கவிழ்ந்து வீரர் சாவு
நெல்லை மாவட்டம் அம்பையில் நேற்று முன்தினம் மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம் நடந்தது. இதில் ஏராளமான மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகளுடன் வீரர்கள் பந்தயத்தில் கலந்து கொண்டனர்
அம்பை:
நெல்லை மாவட்டம் அம்பையில் நேற்று முன்தினம் மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம் நடந்தது. இதில் ஏராளமான மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகளுடன் வீரர்கள் பந்தயத்தில் கலந்து கொண்டனர்.
இதில் பங்கேற்ற நெல்லை அருகே நடுக்கல்லூர் வேத கோவில் தெருவைச் சேர்ந்த மாடசாமி என்ற மகாராஜன் (வயது 45) ஓட்டிச்சென்ற மாட்டு வண்டியின் அச்சு திடீரென்று முறிந்தது.
இதனால் மாட்டு வண்டி கவிழ்ந்ததில் மகாராஜன் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். உடனே அவருக்கு அம்பை அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனாலும் சிகிச்சை பலனின்றி மகாராஜன் நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.