விஷ மாத்திரை தின்ற கொத்தனார் சாவு


விஷ மாத்திரை தின்ற கொத்தனார் சாவு
x

விஷ மாத்திரை தின்ற கொத்தனார் சாவு

கன்னியாகுமரி

கருங்கல்:

கருங்கல் அருகே உள்ள பாத்திரமங்கலம் மலவிளையை சேர்ந்தவர் தாம்சன்(வயது42). இவர் கேரளாவில் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு வாரத்துக்கு முன் சொந்த ஊருக்கு வந்த தாம்சன், உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறிவந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் மாத்திரையை தின்று விட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை மீட்டு நெய்யூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தாம்சன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாம்சனின் மனைவி ஷீபா கொடுத்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story