கட்டிட பணியின்போது கீழே விழுந்த கொத்தனார் சாவு
கட்டிட பணியின்போது கீழே விழுந்த கொத்தனார் இறந்தார்.
திருச்சி
ஸ்ரீரங்கம்:
திருச்சி மாவட்டம் புலிவலம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 29). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கட்டிட வேலையில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்பட்ட 15 அடி உயர சாரத்தில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story