அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் சாவு


அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் சாவு
x

திங்கள்சந்தை அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவருடன் சென்ற சிறுமி படுகாயம் அடைந்தார்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

திங்கள்சந்தை அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவருடன் சென்ற சிறுமி படுகாயம் அடைந்தார்.

இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

வாலிபர் சாவு

குளச்சல் அருகே உள்ள உடையார்விளையை சேர்ந்தவர் சுஜித் (வயது 27), தொழிலாளி. இவர் இரவு செட்டியார் மடத்தில் உள்ள தனது உறவினர் மகள் வாணிஸ்ரீயை (15) மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு திங்கள்நகர் நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

பூசாஸ்தான்விளை பகுதியில் மோட்டார் சைக்கிள் வரும்போது, முன்னால் சென்ற அரசு பஸ்சை சுஜித் முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி இருவரும் கீழே தூக்கி வீசப்பட்டனர். அப்போது, சுஜித் முந்தி செல்ல முயன்ற பஸ் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

விசாரணை

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வாணிஸ்ரீயை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த விபத்து பற்றி அரசு பஸ் டிரைவர் குமரேசன் இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story