தண்ணீரில் மூழ்கி சிறுவன் சாவு


தண்ணீரில் மூழ்கி சிறுவன் சாவு
x
தினத்தந்தி 3 Jun 2022 12:25 AM IST (Updated: 3 Jun 2022 1:33 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டியில் தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக இறந்தார்.

கடலூர்

பண்ருட்டி,

பண்ருட்டி டைவர்ஷன் ரோடு தனலட்சுமி நகரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் சுகிதன் (வயது 13). பண்ருட்டியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். சுகிதன் நேற்று தனது நண்பர்களுடன் பண்ருட்டி கெடிலம் ஆற்றில் குளிக்க சென்றான். அப்போது எதிர்பாராதவிதமாக சுகிதன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான். இது குறித்த புகாரின் பேரில் காடாம்புலியூா் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story