கிணற்றில் மூழ்கி தோட்ட காவலாளி சாவு
திருப்பத்தூர் அருகே கிணற்றில் மூழ்கி தோட்ட காவலாளி பலியானார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே கிணற்றில் மூழ்கி தோட்ட காவலாளி பலியானார்.
திருப்பத்தூர் தாலுகா புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியதம்பி (வயது 60). இவர் ராஜபாளையம் கிராமத்தில் மோகன்ராஜ் என்பவரது தோட்டத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை ராஜபாளையம் தோட்டத்து கிணற்றில் குளித்து விட்டு வருவதாக கூறிச்சென்ற பெரியதம்பி திரும்பி வரவில்லை.
அவரது குடும்பத்தினர் தேடியபோது கிணற்றின் அடியில் சேற்றில் சிக்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சேற்றில் சிக்கி இருந்த பெரியதம்பியைள மீட்டபோது அவர்இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து பெரியதம்பியின் உடலை குரிசிலாப்பட்டு போலீசார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
=========