லாரி மீது கார் மோதி தொழில் அதிபர் சாவு


லாரி மீது கார் மோதி தொழில் அதிபர் சாவு
x

தர்மபுரி அருகே லாரி மீது கார் மோதி தொழில் அதிபர் பரிதாபமாக இறந்தார்.

தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி அருகே லாரி மீது கார் மோதி தொழில் அதிபர் பரிதாபமாக இறந்தார்.

லாரி மீது கார் மோதல்

தெலுங்கானா மாநிலம் ஆர்.ஆர். மாவட்டம் ஹேமா நகர் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 36). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் தனது குடும்பத்தினர் 3 பேருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதற்காக காரில் புறப்பட்டார். காரை மகாலட்சுமி என்பவர் ஓட்டி வந்தார்.

தர்மபுரி அருகே மாட்டுக்காரனூர் பகுதியில் வந்தபோது முன்னால் சென்ற லாரி மீது கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் மகாலட்சுமி, சுதாகர் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். மற்ற 2 பேர் லேசான காயம் அடைந்தனர்.

பரிதாப சாவு

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுதாகர் பரிதாபமாக உயிரிழந்தார். மகாலட்சுமிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story