விஷத்தழை சாப்பிட்ட சமையல் மாஸ்டர் சாவு
கண்ணமங்கலம் அருகே விஷத்தழை சாப்பிட்ட சமையல் மாஸ்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை
கண்ணமங்கலம்
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள எஸ்.தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 65), சமையல் மாஸ்டர். இவர், மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரது மனைவி பூங்கொடி திட்டியதால், மனமுடைந்து ஏரிக்கரை பகுதிக்கு சென்று விஷத்தழை சாப்பிட்டு மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.
இதனையடுத்து சாமிநாதன் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story