சுங்கச்சாவடி பணியாளருக்கு கொலை மிரட்டல்


சுங்கச்சாவடி பணியாளருக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 1 Dec 2022 12:15 AM IST (Updated: 1 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சுங்கச்சாவடி பணியாளருக்கு கொலை மிரட்டல் லாரி உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பாலு என்கிற பாலசுப்ரமணியன்(வயது 42). லாரி உரிமையாளரான இவர் சம்பவத்தன்று தனக்கு சொந்தமான லாரியில் செங்குறிச்சி கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் வந்தபோது அவரிடம் அங்கு பணியில் இருந்த ஊழியர் அஸ்மதுல்லா சுங்க கட்டணம் கேட்டதாக தெரிகிறது. அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சுங்கச்சாவடி ஊழியருக்கு பாலு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி அதன் நிர்வாக மேலாளர் வீரபாபு கொடுத்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலுவை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story