சினிமா இயக்குனருக்கு கொலை மிரட்டல்
உளுந்தூர்பேட்டையில் சினிமா இயக்குனருக்கு கொலை மிரட்டல்
கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமிபுரத்தைச் சேர்ந்த அருணாசலக் கவுண்டர் மகன் ஏ.கே.சாமி. சினிமா இயக்குனரான இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட வன்னியர் சங்க செயலாளராகவும் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் உளுந்தாண்டார் கோவில் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் மகன் சண்முகம்(42) என்பவர் ஏ.கே.சாமியைப் பற்றி ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசி கொலை மிரட்டல் விடுத்து வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் சாமி கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருள்செல்வம் வழக்குப்பதிவு செய்து சண்முகத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story