மளிகை கடைக்காரருக்கு கொலை மிரட்டல்


மளிகை கடைக்காரருக்கு கொலை மிரட்டல்
x

கல்லணை அருகே மளிகை கடைக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி:

கல்லணை அருகே உள்ள கோவிலடி மெயின் ரோட்டில் மளிகை கடை வைத்திருப்பவர் புருஷோத்தமன் (வயது 44). இவரது கடைக்கு அதே ஊர் வள்ளுவர் புரத்தை சேர்ந்த வீரமணி (25) என்பவர் வந்து பணம் கடன் கேட்டுள்ளார். இதற்கு புருஷோத்தமன் கடன் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வீரமணி, புருஷோத்தமனை தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து புருஷோத்தமன் தோகூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஐயா பிள்ளை மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story