முதியவருக்கு கொலை மிரட்டல்3 பேர் மீது வழக்கு
முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம்
விழுப்புரம் அருகே உள்ள வேடம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 75). இவர் அதே பகுதியில் 2 சென்ட் புறம்போக்கு மனையை பட்டா வாங்கி அனுபவித்து வருகிறார். அதன் அருகில் வசிக்கும் வீரமுத்து (60), அவரது மகன்கள் அஜித், அபி ஆகியோர் சேர்ந்து இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது என்று கூறி அங்கு போடப்பட்டிருந்த முள்வேலியை அகற்றினர். மேலும் சுப்பிரமணியை அவர்கள் 3 பேரும் சேர்ந்து திட்டி கடப்பாறை, உருட்டுக்கட்டையை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து சுப்பிரமணி, காணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வீரமுத்து உள்ளிட்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story