போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 10 Nov 2022 12:15 AM IST (Updated: 10 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 5பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள சில்லிகுளம் கிராமத்தில் பிள்ளையார் கோவில் திருவிழா நடந்தது. விழாவில் பாட்டு கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அனுமதி பெறப்பட்டு நடைபெற்றது. இதையொட்டி அங்கு சின்ன கோவிலான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகணேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு திடீரென்று கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதானப்படுத்த முயற்சித்த போது குருக்கள்பட்டியை சேர்ந்த ரமேஷ் கண்ணன், அருண்குமார், ஆயாள்பட்டியைச் சேர்ந்த வெற்றிசிவா, சில்லிகுளத்தை சேர்ந்த ராமச்சந்திரன், மகேந்திரன் ஆகியோர் சப்-இன்ஸ்பெக்டர் ராமகணேசனை வழிமறித்து மோட்டார் சைக்கிளை செல்ல விடாமல் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் சின்னகோவிலான்குளம் இன்ஸ்பெக்டர் மாதவன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 5 பேரை தேடி வருகிறார்.


Next Story