போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்
x

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த ௭ பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

திருச்சி பாலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையிலான போலீசார் பாலக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ரெயில்வே தண்டவாள பகுதி அருகே அதே பகுதியை சேர்ந்த குணசேகரன் (வயது 52) என்பவர் லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டிருந்தார். உடனே போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் லாட்டரி சீட்டை கொடுக்கும்படி கேட்டனர். அதற்கு அங்கிருந்த பிரபு (23), ஏபின்ராஜ் (24), வில்லியம்ஸ் (26), ஜின்னா (45), அபுரியாஸ் (23), அருண் (19) ஆகியோர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து அவரை பணி செய்ய விடாமல் தடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெல்சன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, குணசேகரன் உள்பட 7 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்கள், லாட்டரி சீட்டு எண்கள் எழுதப்பட்ட காகிதங்கள், 12 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story