பெண்ணுக்கு கொலை மிரட்டல்; 2 பேர் மீது வழக்கு


பெண்ணுக்கு கொலை மிரட்டல்; 2 பேர் மீது வழக்கு
x

உடையார்பாளையம் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் பொட்டுக்கடலை மெயின் ரோடு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி செல்வநாயகி (வயது 41). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சேரன் மனைவி அஞ்சம்மாள் (48) என்பவருக்கும் நிலத்தகராறு சம்பந்தமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் செல்வநாயகியை அஞ்சம்மாள் மற்றும் அவரது மகன் விக்னேஷ் (27) ஆகியோர் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து செல்வநாயகி அளித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் அஞ்சம்மாள், விக்னேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story