முதியவருக்கு கொலை மிரட்டல்; பஞ்சாயத்து துணைத் தலைவர் கைது
குரும்பூர் அருகே கோவிலை நிர்வகிப்பதில் ஏற்பட்ட தகராறில் முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பஞ்சாயத்து துணைத் தலைவர் கைது செய்யப்பட்டார்.
தென்திருப்பேரை:
குரும்பூர் அருகே கோவிலை நிர்வாகம் செய்வதில் ஏற்பட்ட தகராறில் முதியவருக்கு கொலைமிரட்டல் விடுத்த பஞ்சாயத்து துணைத்தலைவரை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பிரச்சினை
குரும்பூர் அருகே உள்ள நாலுமாவடியில் பாதக்கரை சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலை நிர்வாகம் செய்வதில் அதே ஊரை சேர்ந்த அழகேசன் என்பவர் தரப்பினருக்கும், ராஜேஷ் என்பவர் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.
ெகாலைமிரட்டல்
இந்த நிலையில் கடந்த மாதம் அழகேசன் தரப்பைச் சார்ந்த லோகநாதன் (வயது 72) என்பவரை கடந்த மாதம் வழிமறித்து, ராஜேஷ் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ராஜேஷ் மீது குரும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை தேடிவந்தனர்.
கைது
இந்த நிலையில் நேற்று குரும்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் முதியவரை மிரட்டிய ராஜேஷை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் தற்போது நாலுமாவடி பஞ்சாயத்து துணைத் தலைவராக உள்ளது குறிப்பிடத்தக்கது.