கல்குவாரி மேற்பார்வையாளருக்கு கொலை மிரட்டல்; லாரி டிரைவர் கைது


கல்குவாரி மேற்பார்வையாளருக்கு கொலை மிரட்டல்; லாரி டிரைவர் கைது
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-25T00:15:52+05:30)

சாத்தான்குளம் அருகே கல்குவாரி மேற்பார்வையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்ணாக்குடி செட்டிகுளம் சாலையில் உள்ள கல்குவாரி ஒன்றில் மாரியப்பன் (வயது 44) என்பவர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பணியில் இருந்தபோது கொம்பன்குளத்தை சேர்ந்த லாரி டிரைவரான சுடலைக்கண் மகன் கண்ணன் (33) என்பவர், கிரஷரில் உள்ள எடை மேடையில் எடை பார்க்க லாரியை ஏற்றி உள்ளார். அப்போது மாரியப்பன் மாற்று பாதை வழியாக வருமாறு கூறியுள்ளார். அதற்கு கண்ணன் மறுத்ததால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கண்ணன், மாரியப்பனை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து விசாரணை நடத்தி கண்ணனை கைது செய்தார்.


Next Story