விவசாயிக்கு கொலை மிரட்டல்; அண்ணன்-தம்பி கைது
நாலாட்டின்புத்தூர் அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி
நாலாட்டின்புத்தூர்:
நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள பெருமாள்பட்டியை சேர்ந்தவர் லெனின் (வயது 62). விவசாயி. இவருடைய மனைவி முன்னாள் பஞ்சாயத்து தலைவியாவார். இவரது குடும்பத்தினருக்கும், அதே ஊரிலுள்ள மேட்டுத்தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன்களான முனியசாமி (55), லிங்கம் பட்டிபகுதியை சேர்ந்த லிங்கம் (39) ஆகியோருக்கும் இடையே தேர்தல் முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் முனியசாமி, லிங்கம் ஆகிய இருவரும் சேர்ந்து நேற்று முன்தினம் லெனினை அவதூறாக பேசியதுடன் கொலைமிரட்டல் விடுத்து விட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் நாலாட்டின்புத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அங்குத்தாய் வழக்குப்பதிவு செய்து முனியசாமி, லிங்கம் ஆகியோரை கைது செய்தார்.
Related Tags :
Next Story