மங்கலம் அருேக குட்டையில் மீன் பிடிக்க சென்ற போது நீரில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
மங்கலம் அருேக குட்டையில் மீன் பிடிக்க சென்ற போது நீரில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
மங்கலம், அக்.16-
மங்கலம் அருேக குட்டையில் மீன் பிடிக்க சென்ற போது நீரில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மீன் பிடிக்க சென்றனர்
திருப்பூர் மாவட்டம் மங்கலத்தை அடுத்த 63வேலம்பாளையம் அருகே உள்ள அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 40). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கல்பனா (35). இவர்களுடைய மகன் கிஷோர்(9).
இதுபோல் 63 வேலம்பாளையம் ஊராட்சி அண்ணா நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் வேலன் (40), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஜோதி (36). இவர்களுடைய மகன் கதிர்வேல் (11). கிஷோர், கதிர்வேல் இருவரும் நண்பர்கள். கிஷோர் 63 வேலம்பாளையம் அரசுப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். கதிர்வேல் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.
நீரில் மூழ்கி 2 பேர் பலி
இந்த நிலையில் கிஷோர்், கதிர்வேல் இருவரும் 63 வேலம்பாளையம் அருகே உள்ள மூணுமடை பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள குட்டையில் மீன்பிடிக்க சென்றனர். அதன்பின்னர் மாலை 6 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை. அவர்கள் வீடு திரும்பாததால் கிஷோரின் பெற்றோர், கதிர்வேலின் பெற்றோர் ஆகியோர் அக்கம் பக்கத்தில் சிறுவர்களை தேடினர். நீண்ட நேரம் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.
பின்னர் 63வேலம்பாளையம் அருகே உள்ள மூணுமடை பகுதியில் செம்மண்குட்டையில் மாணவர்களின் செருப்புகள் மிதந்துள்ளது. இதனால் மாணவர்கள் குட்டை நீரில் மூழ்கியிருக்கலாம் எனக்கருதப்பட்டது. இதையடுத்து மங்கலம் போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் திருப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று இரவு 7 மணிக்கு திருப்பூர் தீயணைப்பு நிலைய அதிகாரி தலைமையிலான வீரர்கள் செம்மண்குட்டையில் மூழ்கிய மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
முதலாவதாக கதிர்வேலின் உடல் மீட்கப்பட்டது. இரண்டாவதாக கிஷோரின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் அவர்கள் இ்ருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மீன்பிடிக்கச் சென்று நீரில் மூழ்கி 2 மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.