கடன் தொல்லையால் முறுக்கு வியாபாரி விஷம் குடித்து தற்கொலை


கடன் தொல்லையால் முறுக்கு வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
x

கடன் தொல்லையால் முறுக்கு வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே உள்ள கீழநெம்மகோட்டையை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 47). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். பாஸ்கர் ஆலங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தள்ளுவண்டி மூலம் முறுக்கு வியாபாரம் செய்து வந்தார். இந்தநிலையில் கடன் தொல்லை காரணமாக அவதிப்பட்டு வந்த பாஸ்கர் விஷம் குடித்து மீனாட்சிபுரம் பிரிவு ரோட்டில் மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை அப்பகுதி மக்கள் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பாஸ்கர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story